இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் மேட்சின் 4வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 280 ரன்கள் தேவை

www.indcricketnews.com-indian-cricket-news-0102

கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைதொடர்ந்து நியூசிலாந்து  296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49 ரன்கள் பின் தங்கியிருந்தது.

மேலும், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்  இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்து  63 ரன்கள் முன்னிலை வகித்தது.  நான்காவது நாளான நேற்று இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. இதில் 11.1 ஓவரில் புஜாரா 3 பவுண்டரி உட்பட  22(33)ரன்களில் கைல் ஜேமிசனிடம் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 14.5 ஓவரில் 4(15) ரன்களுடன் ஆஜஸ் படேலின் சுழற்பந்தில் சிக்கி ஏமாற்றமளித்தார். அடுத்ததாக 19.2 ஓவரில் மாயங்க் அகர்வால் 4 பவுண்டரி உட்பட 17(53)ரன்களுடன் பெவிலியன் திரும்ப , முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்த ரவீந்திர ஜடேஜாவும் அதே ஓவரில் ரன்கள் எதுவும் எடுக்காமல்  டிம் சௌதீயின் பந்தில் வெளியேறி ஷாக் கொடுத்தார்.

அதன்பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் -அஸ்வின்  ஜோடியில் ஜெமிசன் வீசிய 39. 2 வது ஓவரில் 5 பவுண்டரி உட்பட 32(62) ரன்களுடன் அஸ்வின் வெளியேற , ஷ்ரேயாஸ் ஐயர்  8 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 65(125) ரன்களில் தனது விக்கெட்டை 60.2 வது ஓவரில் சௌதீயிடம் பறிகொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய விருத்திமான் சஹா – அக்சர் பட்டேல் ஜோடியின் விக்கெட்டை பறிக்க முயற்சித்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

இறுதியில், இந்தியா 81 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து  234 ரன்களுக்கு  டிக்ளர் செய்தது. விக்கெட் கீப்பர் சஹா 4 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 61(126) ரன்களுடனும்,அக்சர் பட்டேல் 2 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 28(67) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மேலும், 284 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான வில் யங் 2 (6) ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் வெளியேறினார்.

இதனால்  90 ஓவர்கள் 9 விக்கெட்டுகள் இருக்க நியூசிலாந்து வெற்றிபெற 280 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய மண்ணில், இதுவரை டெஸ்ட் மேட்ச்சில் அதிகபட்சம் 275 ரன்கள் மட்டுமே சேஸ் செய்யப்பட்டுள்ளதால்

இப்போட்டி ஒன்று டிராவில் முடிவடையும் அல்லது இந்தியா வெற்றி பெறும். இந்நிலையில், கடைசி நாளான இன்று(நவ்:29) சுழற்பந்துவீச்சுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும் என்று கருத்துகளை பலர் பதிவிட்டுவருகின்றனர்.

Be the first to comment on "இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் மேட்சின் 4வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 280 ரன்கள் தேவை"

Leave a comment