இந்தியா – நியூசிலாந்து அணியின் 2-வது டெஸ்ட் தொடரின் 3ஆம் நாள் முடிவில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதால் இந்தியாவின் மாபெரும் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவை.

www.indcricketnews.com-indian-cricket-news-019

மும்பை: இந்தியா-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் , இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில்,

இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்கள் முன்னிலையுடன் , நியூசிலாந்துக்கு பால்-ஆன் கொடுக்காமல்  2-வது இன்னிங்ஸை தொடங்கியது. அணியின், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் –  புஜாரா ஜோடியில் மயங்க்  38(75)ரன்களும்,  புஜாரா 29(51) ரன்களும் எடுத்து களத்திலிருந்தனர்.இதனால் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட்  எதுவும் இழக்காமல் 332 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 3ஆம் நாளான நேற்று(டிசம்பர்:5) தனது ஆட்டத்தை  தொடங்கிய இந்திய அணியின் மயங்க் அகர்வால் – புஜாரா ஜோடியில் மயங்க் 9 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 62(108)ரன்களும் புஜாரா  1 சிக்ஸர் 6 பவுண்டரி உட்பட 47(97) ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைதொடர்ந்து, களமிறங்கிய சுப்மன் கில் – கேப்டன் கோலி ஜோடியில் சுப்மன் கில் 4 பவுண்டரி உட்பட 47(75) ரன்களுடனும், கேப்டன் கோலி 36(84)ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 14(8) ரன்களும், ரித்துமான் சஹா 2 பவுண்டரி உட்பட 13(12) ரன்களும், ஜெயந்த் யாதவ் 6(11) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதில், அக்ஸர்  படேல் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 41(26) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இருப்பினும், இந்தியா 2வது இன்னிங்ஸை 70 ஓவர்களில் 7 விக்கெட்டு இழப்புக்கு  276 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதில், நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளையும, ரவிந்தரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து,  540 ரன்களை  இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்களான டாம் லதாம் 6(15) ரன்களும்,வில் யங் 4 பவுண்டரி உட்பட 20(41) ரன்களும், டேரில் மிட்செல் 7 பவுண்டரி, 2சிக்ஸர் உட்பட 60(92)ரன்களும்,ராஸ் டைலர் 6(8) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹென்றி நிக்கோல்ஸ் 7 பவுண்டரி உட்பட 36(86) ரன்களும் ,ரவிந்தரா 2(23) ரன்களும் எடுத்து  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் ,3ஆம் நாள் ஆட்ட நேரம் முடிவடைந்ததால் 5 விக்கெட்டு இழப்புக்கு  140 ரன்களை எடுத்துள்ளனர். இதில்,

இந்திய அணியின் அஸ்வின் மட்டும் 3 விக்கெட்டுகளை கைபற்றினார். மேலும், நியூசிலாந்து வெற்றிபெற இன்னும் 400 ரன்கள் தேவை. இதனால், இந்தியா 5 விக்கெட் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தற்போது வரை இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.

Be the first to comment on "இந்தியா – நியூசிலாந்து அணியின் 2-வது டெஸ்ட் தொடரின் 3ஆம் நாள் முடிவில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதால் இந்தியாவின் மாபெரும் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவை."

Leave a comment

Your email address will not be published.


*