இந்தியா-தென்னாப்பிரிக்கா, 3வது டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எடுத்த ஐந்து விக்கெட்டுக்களால் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-043

கேப்டவுன்: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்டர்ஸ் மைதானத்தில் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 79 ஓவருக்கு 10 விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. இதில் மார்க்ரம் 8(20), மகாராஜ் 6(12) ஆகியோர் களத்தில் இருந்தனர். இதனையடுத்து இரண்டாவது நாளான நேற்று களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் மார்க்ரம்- மகாராஜ் ஜோடியில் மார்க்ரம் 8(22) ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

இதில் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்திருந்த மகாராஜ் 25(45) ரன்கள் எடுத்தபோது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த வெண்டர் துஷன் மற்றும் கீகன் பீட்டசர்சன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் வெண்டர் துஷன் 21(54) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 39 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்தது.  இதைத் தொடர்ந்து களமிறங்கிய பவுமா 55வது ஓவரில் 28(52) ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் வெர்ரனே ரன்கள் எதுவும் எடுக்காமல் அதே ஓவரில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதில் இறுதிவரை சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் 9 பவுண்டரி உட்பட 72(166) ரன்கள் எடுத்த போது பும்ரா வீசிய பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜென்சன் 7(26), ரபாடா 15(25), நெகிடி 3(17) ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அருகே வந்தபோதும் தென்னாப்பிரிக்க அணி 76 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் புஜாரா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்தூல் தாகூர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து பெரிய இலக்கை அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்- மாயங் அகர்வால் ஜோடியில் மாயங் அகர்வால் 7(15) ரன்களும், கே. எல். ராகுல் 10(22) ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இதனால் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 17 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 57 ரன்கள் எடுத்தது. இதில்  களமிறங்கிய  சீனியர் வீரர்களான புஜாரா 9(31)- கோஹ்லி 14(39) ஜோடி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.