இந்தியா-தென்னாப்பிரிக்காவின் 3வது டெஸ்ட் தொடரின் முதல் நாள் முடிவில் கேப்டன் விராட் கோலி தனி ஒருவராக போராடி ஆட்டமிழந்தார்.

www.indcricketnews.com-indian-cricket-news-038

கேப் டவுன்: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. இந்நிலையில் தென்னாவப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.  இதில்,இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

மேலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல்-மாயங் அகர்வால் ஜோடி பொறுப்புடன தங்களது இன்னிங்சை தொடங்கினர். இருப்பினும், 11 வது ஓவரில் கே எல் ராகுல் 12(35) ரன்கள் எடுத்தபோது விக்கெட் கீப்பர் கைல் வெர்ரனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த ஓவரிலேயே மாயங் அகர்வால் 3 பவுண்டரிகள் விளாசி 15(35) ரன்களில் எய்டன் மார்க்கரமின் கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.

மேலும் ,இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு  சீனியர்கள் தலையில் வந்து விழுந்தது. இதையடுத்து களமிறங்கிய  புஜாரா – விராட் கோலி  ஜோடியில் புஜாரா  7 பவுண்டரி உட்பட 43(77) ரன்கள் எடுத்து எதிர்பாராத விதமாக வெர்ரனேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே  9(12) ரன்களில் ரபாடா வீசிய பந்தில் வெர்ரனேவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 42வது ஓவரில் 116 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கோஹ்லிக்கு ஜோடியாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 பவுண்டரிகள் உட்பட 27 (50) ரன்கள் எடுத்து மார்கோ ஜென்சன் பந்துவீச்சில் நேராக ஃபில்டரிடம் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் .

மேலும், இறுதிவரை களத்திலிருந்த விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 1 சிக்ஸர், 12 பவுண்டரி உட்பட 79(201) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் வெர்ரனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் களமிறங்கிய அஷ்வின் 2(10), ஷர்தூல் தாகூர்12(9) , பும்ரா 0(9), ஷமி 7(20) ஆகியோர் பெரிய ஸ்கோர் எதுவும் எடுத்து கைக்கொடுக்காததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 79வது ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்து குறைந்த ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதில் தென்னாப்பிரிக்கா சார்பாக ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜென்சன் 3 விக்கெட்டுகளையும், நெகிடி, ஒலிவியர் மற்றும் மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் டி எல்கர்- மார்க்கரம் ஜோடியில் எல்கர் 3(16) ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் முதல்நாள் ஆட்ட முடிவில் 17 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்தது. இதில் மார்க்ரம் 8(20), மகாராஜ் 6(12) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.