இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய கோட்டையை புரோட்டீஸ் உடைத்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-024

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.இதைத்தொடர்ந்து  2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 63 ஓவருக்கு 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 79 ஓவருக்கு 229 ரன்களும் எடுத்தன .

இதைதொடர்ந்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 60 ஓவருக்கு 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவருக்கு 2 விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் குவித்தது.

இதில், கேப்டன எல்கர் 46(121)ரன்களும், வன் டீர் துசன் 11(37)ரன்களும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதியான நேற்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய கேப்டன் எல்கர் – வன் டீர் துசன் ஜோடியில் வன் டீர் துசன் 53வது ஓவரில் 40(92) ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

 அதன்பின்னர்  கேப்டன் எல்கர்க்கு ஜோடியாக டெம்பா பவுமா களமிறங்கி இருவரும்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 67 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து  243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் வாண்டரர்ஸில் முதல் முறையாக  டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இதில் கேப்டன் எல்கர் 96(188) ரன்களுடனும் மற்றும் டெம்பா பவுமா 23(45) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். மேலும் சிறப்பாக விளையாடிய டீன் எல்கர் ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியின் வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

 மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற 11ஆம் தேதி முதல் கேப் டவுனில் துவங்கவிருக்கிறது. மேலும்,இந்தியாவுக்கு எதிராக 1992 ல் நடந்த டெஸ்ட் இன்னிங்ஸில் அப்போதைய தென்னாப்பிரிக்க கேப்டனாக இருந்த வெஸ்ஸல்ஸ் டர்பன் 118 ரன்கள் அடித்திருந்தார். அதன்பிறகு தற்போது எல்கர் 96 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதற்குமுன் 2006-ல் கிரேம் ஸ்மித் என்பவர் 94 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.