இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். ஏனெனில்,இலக்கை அடைய எல்கர் ஆட்டத்தை நிலையாக வைத்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-018

ஜோகனஸ்பர்க்: இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், சென்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த

ஜனவரி 3ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 63 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 202 ரன்களை எடுத்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணி 79வது ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து 229 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 20 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்து, 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இதில், புஜாரா 35(42)-  ரஹானே 11 (22) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் ரஹானே- புஜாரா ஜோடியில் அஜிங்கிய ரஹானே 8 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 58 (78) ரன்களும், சேத்தேஸ்வர் புஜாரா 10 பவுண்டரி உட்பட 53 (86) ரன்களும் எடுத்த இருவரும் ரபாடா வீசிய பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய, ஹனுமா விஹாரி நிதானமாக விளையாடி 6 பவுண்டரி உட்பட 40 (84) ரன்கள்  எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.

மேலும், அஷ்வின் 2 பவுண்டரி உட்பட 16(14)ரன்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல ஷர்தூல் தாகூர் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 28(24) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கோ யான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 0(3),முகமது ஷமி 0(6),பும்ரா 7(14), சிராஜ் 0(2) ஆகியோர் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில்,

60 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதில், ரபாடா, மார்கோ யான்சன், லுங்கி நெகிடி ஆகியோர் தலா மூன்று விக்கெட்களையும்,ஒலிவியர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 240 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின்  எய்டன் மார்க்கரம் 31 (38) ரன்களிலும், கீகன் பீட்டர்சன் 28 (44) ரன்களிலும்  எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கேப்டன் டி எல்கர் 46(121) ரன்களும், வன் டீர் துஷன் 11(37) ரன்களும் எடுத்து விளையாடி வந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்து 122 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.