இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் லார்ட் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்தியா 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-011

 ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சென்சுரியன் மைதானத்தில் வரலாறு படைத்தது.

இதைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின்  கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் ,இந்தியா முதல் இன்னிங்ஸில் 63 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து  202 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 39/1 எடுத்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில்,கேப்டன் டீன் எல்கர் 11 (57) – கீகன் பீட்டர்சன் 14(39) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

மேலும், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று துவங்கியது. இதில் களமிறங்கிய டீன் எல்கர்- கீகன் பீட்டர்சன் ஜோடியில் டீன் எல்கர் 28(120) ரன்களில் ரிஷப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்தில் சிறப்பாக விளையாடிய கீகன் பீட்டர்சனை 9 பவுண்டரி உட்பட 62(118) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்தூல் வீழ்த்தி அசத்தினார். அடுத்து களமிறங்கிய வன் டீர் துஷனை வை 1(17) ஷர்தூல் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால்,தென்னாப்பிரிக்க அணி 102/4 ரன்கள் எடுத்தபோது முதல் செஷன் முடிவுக்கு வந்தது.

அடுத்து இரண்டாவது செஷனில் களமிறங்கிய டெம்போ பவுமா -விக்கெட் கீப்பர் வெர்ரைன் ஜோடியில் வெர்ரைன் 21(72) ரன்களில் ஷர்தூல் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழந்தார். மேலும், பவுமா 6 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 51 (60) ரன்கள் எடுத்தபோது ஷர்தூல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ரபாடா0(6), மகாராஜ் 3 பவுண்டரி உட்பட 21(29) ரன்களிலும் ,மார்கோ யான்சென் 3 பவுண்டரி உட்பட 21(34) ரன்களிலும், நிகிடி 0(1) ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், முதல் இன்னிங்ஸில் 79 ஓவருக்கு தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட் இழந்து 229 ரன்கள் எடுத்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதில், ஷமி 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மேலும், ஷர்தூல் தாகூர் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதனைத்தொடர்ந்து ,இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் ஜோடியில் ராகுல் 8(21) ரன்களிலும் ,மயங்க் அகர்வால் 5 பவுண்டரி உட்பட 23 (37) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சேத்தேஸ்வர் புஜாரா  35 (42)- அஜிங்கிய ரஹானே 11 (22) ஜோடி விளையாடி வந்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில், இந்தியா 20 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்து, 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.