இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் புரோடீஸ் 167 ரன்கள் பின்தங்கியுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-008

ஜோகன்ஸ்பர்க்: இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சுரியனில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான சென்சுரியன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி வெற்றிபெற்றதே கிடையாது.  இந்நிலையில், கடுமையாக போராடிய இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.

இதைத்தொடர்ந்து  நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இரண்டாவது போட்டி துவங்கியுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துவிடும்.

இந்நிலையில், கேப்டன் விராட் கோலி தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய  கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.இருப்பினும் அந்த ஜோடியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்க் அகர்வால் 14வது ஓவரில் 5 பவுண்டரி உட்பட 26(37) ரன்கள் எடுத்தபோது விக்கெட் கீப்பர் வெர்ரனேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் களமிறங்கிய சீனியர் வீரர்களான புஜாரா 23வது ஓவரில் 3(33) ரன்கள் மட்டுமே எடுத்து  பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே அதே ஓவரில் கீகன் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி ஷாக் கொடுத்தார். இதனால், முதல் செஷன் முடிவில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து, இரண்டாவது செஷனில் விராட் கோலிக்கு பதிலாக களமிறங்கிய விஹாரி 38வது ஓவரில் 20(53) ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும்,தொடர்ந்து களத்திலிருந்த கே.எல்.ராகுல் 45வது ஓவரில் 9 பவுண்டரி உட்பட 50(133) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து ரிஷப் பந்த் 53 வது ஓவரில் 17 (43) ரன்களுடன் ஆட்டமிழந்தது நடையைக் கட்டினார். தொடர்ந்து, களமிறங்கிய ஷர்துல் தாகூர்0(5),முகமது ஷமி9(12) ,பும்ரா 14(11), சிராஜ் 1(6)ஆகியோர் பெரிதாக ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதில்,அஷ்வின் மட்டும் 6 பவுண்டரி உட்பட 46(50) ரன்கள் குவித்து அசத்தினார்.இருப்பினும், 60வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 63 ஓவருக்கு 10 விக்கெட் இழந்து 202 ரன்களை சேர்த்தது.

இதில், தென்னாப்பிரிக்கா சார்பாக மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகளையும், ஒலிவியர் மற்றும் ரபாடா தலா 3 விக்கெட்டுகளையும் கைபற்றினர்.

 இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின்  எய்டன் மார்க்கரம் 7 (12) ரன்கள் எடுத்தபோது ஷமி பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் 11 (57)-கீகன் பீண்டடர்சன் 14 (39) ஜோடி களத்தில் இருக்கும் நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில், 35/1 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 167 ரன்கள் பின்தங்கியுள்ளது.