இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் தொடரில் புரோடீஸ் டாப் ஆர்டர் 3வது நாளில் சரிந்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-071

செஞ்சூரியன்: இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. இதில், கே.எல்.ராகுல் 122 (248), அஜிங்கிய ரஹானே 40 (81) ஆகியோர்  களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மழை காரணமாக இரண்டாவது நாள் போட்டி நடைபெறாமல் ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து, மூன்றாவது நாள் போட்டி நேற்று துவங்கியது. இதில், முதலாவது இன்னிங்ஸில் 500 ரன்கள் வரை குவித்து இந்திய அணி அசத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,     கே.எல்.ராகுல் 123 (260) சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து நடையைக்கட்டினார்.

இதைத்தொடர்ந்து,  ரஹானே 9 பவுண்டரி உட்பட 48 (102)ரன்களும், ரிஷப் பந்த் 8 (13) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், மற்ற வீரர்களான அஷ்வின்4(5), தாகூர் 4(8), ஷமி 8(9), பும்ரா 14(17) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனை நோக்கி நடையைக்கட்டினர். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 105 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் எடுத்தது.

இதில் தென்னாப்பிரிக்காவின் லுங்கி நெகிடி 6 விக்கெட்களையும், ரபாடா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். அடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் டின் எல்கர் 1 (2), எய்டன் மார்க்கரம் 13 (34), கீகன் பீட்டர்சன் 15 (22), வான் டீர் துஷன் 3 (18) குவின்டன் டி 34 (63) ஆகியோரும்  அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய வியான் மல்டர்  12(33) ரன்களும், பவுமா 10 பவுண்டரிகள் விளாசி 52 (103) ரன்களும், மேக்ரோ ஜன்சென் 19(42) ரன்களும் , ரபாடா 25(45) ரன்களும், மகாராஜ் 12(19) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இதனால், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுத்து 130 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இதில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்களை கைப்பற்றி டெஸ்டில் 200 விக்கெட்களை பூர்த்திசெய்து அசத்தினார். மேலும், பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேலும் ,இரண்டாவது இன்னிங்ஸை விளையாட தொடக்க ஆட்டக்காரர்களான கே. எல். ராகுல்- மயாங் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இதில், அகர்வால் 4(14) ரன்களுடன் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய தாகூர் 4(5) ரன்களும், கே. எல். ராகுல் 5(19) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.