இந்தியா -தென்னாப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி: பவுமா – வன் டீர் துஷன் 31 ரன் வித்தியாசத்தில் பிரகாசிக்க, விராட் கோலி மிகப்பெரிய சாதனை படைத்தார்.

www.indcricketnews.com-indian-cricket-news-069

பார்ல்: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல்போட்டி பார்ல் பிட்சில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா  பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜென்னிமன் மாலன்- குவின்டன் டி காக்கை ஜோடியில் மாலன் 6(10) ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 27(41) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரம் 4(11) ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனால், தென்னாப்பிரிக்கா 17 ஓவருக்கு 3 விக்கெட்டை இழந்தது. இந்நிலையில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய டெம்பா பவுமா- வன் டீர் துஷன் ஜோடியில் கேப்டன் பவுமா 8 பவுண்டரி உட்பட 110(143) ரன்கள் எடுத்துபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வன் டீர் துஷன் 129(96) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து தென்னாப்பிரிக்க ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில், தென்னாப்பிரிக்கா 50 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதில் பும்ரா 2 விக்கெட்டையும், அஷ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 297 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்- ஷிகர் தவன் ஜோடியில் கே.எல்.ராகுல் 12(17) ரன்களில் எய்டன் மார்க்கரம்மின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ஷிகர் தவனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும் தவன் 10 பவுண்டரி உட்பட 79(84) ரன்கள் எடுத்தபோது மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து கோஹ்லி 3 பவுண்டரி உட்பட 51(63) ரன்கள் என தனது 63வது ஒருநாள் அரைசதத்தை அடித்தபோது, கேப்டன் பவுமாவிடன் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 16(22), ஷ்ரேயஸ் ஐயர் 17(17), வெங்கடேஷ் ஐயர் 2(7), அஷ்வின் 7(13), புவனேஷ்வர் குமார் 4(11) ஆகியோர் பெரிய ரன்கள் எதுவும் எடுக்காமல் குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதில் ஷர்தூல் தாகூர் 5 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 50(43) ரன்களும், பும்ரா 14(23) ரன்களும் எடுத்து இறுதிவரைப் போராடி களத்தில் இருந்தனர். இருப்பினும் இந்திய அணி 50 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 265 ரன்கள் எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதில் தென்னாப்பிரிக்கா சார்பாக பெஹ்லுக்வாயோ, ஷாம்சி மற்றும் நெகிடி தலா 2 விக்கெட்டையும்,மகாராஜ் மற்றும் மார்க்கரம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மேலும், இத்தொடரின் இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறும்.