இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்களை கொண்டு சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்த வார்னர்

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய, ஆஸ்திரேலிய வீரர்களை கொண்டு எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஆடும் லெவன் அணியை வார்னர் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

அதிரடி பேட்ஸ்மேனான இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை கொண்டு எல்லா காலக்கட்டத்தில் தலைசிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐந்தாவது இடத்தையும், கிளென் மேக்ஸ்வெல்லுக்கு 6–வது இடத்தையும் வழங்கியுள்ளார். எம்எஸ் டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள வார்னர், அவருக்கு 7-வது இடத்தை ஒதுக்கியுள்ளார்.

தொடக்க வீரராக அவரையும், ரோகித் சர்மாவையும் தேர்ந்தெடுத்துள்ளார். 3-வது இடத்திற்கு விராட் கோலியையும், 4-வது இடத்திற்கு ரெய்னாவையும் தேர்வு செய்தள்ளார்.

மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்தள்ளார். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் அல்லது சாஹல் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்களை கொண்டு சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்த வார்னர்"

Leave a comment