இந்தியாவில் டெஸ்ட் தொடர் விளையாடுவது என்பது முதன்மையான சவால் என்று முன்னாள் கிவிஸ் கேப்டன் தியான் நாஷ் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0091

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புத்துணர்ச்சியுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி கான்பூரிலுள்ள மைதானத்தில் நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட்போட்டியில் இரண்டு அணிகளும் பலப்பரிட்சை மேற்கொள்கின்றன.  கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி கோப்பையை தட்டிச் சென்றது.

நடப்பு டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் கிவிஸ் கேப்டன் மற்றும் ஆல்ரௌண்டர் தியான் நாஷ் கூறுகையில்,  சர்வதேச கிரிகெட் போட்டியில் சில நாடுகளில் அந்தந்த அணிகளை எதிர்த்து பிற நாட்டு அணிகள் களமிறங்கவது கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக டெஸ்ட் தொடரில் எதிர்கொள்வது என்பது மற்ற நாட்டு அணிகளுக்கு முதன்மையான சவால். ஆகையால் நியூசிலாந்து அணிக்கு இதற்கு முன் விளையாடிய போட்டிகள் போல இந்த முறையும் கடினமானதாக இருக்கும் என்று  ஜீ நியூஸ் தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் அப்பேட்டியில், விராட் கோலியின் தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற சில சீசன்களில்,  இந்திய அணியை இதுவரை நியூசிலாந்து அணி வீழ்த்தியது இல்லை. அதேபோல  தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளின் வீழ்ச்சி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே பெரிதும் சாதகமாக அமையும்.

இந்தியாவில் வெற்றி என்பது இயலாத ஒன்று.  உலகம் முழுவதும் பல இடங்களில் பல கிரிக்கெட் போட்டிகள் நடந்திருந்தாலும். ஒரு முறையாவது இந்தியாவில் வெற்றி பெறலாம் என்று முயற்சி செய்தும் இன்றளவும் அது மாறவில்லை அதற்கு காரணம் அவர்கள் மிகவும் அந்நியமாக உள்ளனர் குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு.

தற்போது, விராட் கோலி முதல் போட்டியில் கலந்துகொள்ளாமல் மும்பையில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மட்டும் கலந்து கொள்ளவிருப்பதால் கேப்டனாக அவரது சேவையை இந்திய அணி இழந்துள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் டி20 கேப்டன் பதிவியிலிருந்தும் விலகிய கோலியின் முடிவு சரியோ தவறோ. ஆனால், தலைமை பொறுப்பு சில சமயங்களில் சிறந்த பேட்டர்களை தடுத்து நிறுத்தும்.

 விராட் கோலியை பொறுத்தவரை டி20 தலைமை பொறுப்பிலிருந்து விலகியுள்ளதால்  அனைத்து வடிவங்களிலும் உள்ள கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாடுவார். பல கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விளையாடி இருந்தாலும், கோவிட்-19 சூழ்நிலையில் அனைத்து அணிகளும் தங்களை தனிமைபடுத்திக்கொண்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியது மிக முக்கியமானது.

மேலும், குழு மேலாண்மை மற்றும் அணியின் மற்ற வீரர்கள் விராட் கோலியின் திறமையை நன்றாக பயன்படுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக 50 வயதுடைய நியூசிலாந்து அணியின் முன்னாள் கிவிஸ்  கிரிக்கெட்டர் மற்றும் ஆல்ரௌண்டர் தெரிவித்துள்ளார்

Be the first to comment on "இந்தியாவில் டெஸ்ட் தொடர் விளையாடுவது என்பது முதன்மையான சவால் என்று முன்னாள் கிவிஸ் கேப்டன் தியான் நாஷ் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*