இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் ஆகியோர் இந்த ஆண்டு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ பரிந்துரை

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பீரித் பும்ராவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்யும் என தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு கடந்தாண்டே பரிந்துரைக்கப்பட இருந்தார். ஆனால் சீனியர் வீரர் ரவிந்திர ஜடேஜாவால் இவரின் பெயர் கடந்தாண்டு பரிந்துரை செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு இவரின் பெயரை பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2016 இல் இந்திய அணிக்கு அறிமுகமான பும்ரா கடந்த 4 ஆண்டுகளாக அசத்தலான ஆட்டத்தால் மிரட்டி வருகிறார். 26 வயதான இவர் 14 டெஸ்ட், 104 விக்கெட்டுகளில் இருந்து 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஆண்கள் பிரிவில் இருவரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைக்க விரும்பும் பட்சத்தில் இப்பட்டியலில் ஷிகர் தவன் பெயர் அடுத்த இடத்தில் உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு இந்திய ஆண்கள் பிரிவில், பும்ரா, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோரின் பெயர்களை தேர்வு செய்தோம். ஆனால் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே ஆனதால் சீனியர் வீரர் ஜடேஜாவிடம் விருதை தவறவிட்டார் பும்ரா” என்றார்.

இந்நிலையில் 26 வயதான பும்ரா, இந்திய அணிக்காக 14 டெஸ்ட் (68 விக்கெட்), 64 ஒருநாள் போட்டிகள் (104 விக்கெட்), 50 டி-20 (59 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அந்த அதிகாரி மேலும் கூறுகையில், “தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பும்ரா நம்பர்-1 பவுலர். மேலும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 5 விக்கெட் கைப்பற்றிய ஒரே ஆசிய பவுலர். அதனால் இம்முறை பரிந்துரைக்கு சிறந்த பவுலர் தான் பும்ரா” என்றார்.

இம்முறை பிசிசிஐ மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியின் பெயரை பரிந்துரை செய்ய முடியாது. ஏன் என்றால் அவரின் மனைவி அவர் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார். சீனியாரிட்டி படி பார்க்கையில் ஷிகர் தவனுக்கு இம்முறை இந்த விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். பெண்கள் கிரிக்கெட்டில் ஷிகா பாண்டே, தீப்தி சர்மா பெயர்கள் பரிந்துரை செய்யபடும் என தெரிகிறது.

Be the first to comment on "இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் ஆகியோர் இந்த ஆண்டு மதிப்புமிக்க அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ பரிந்துரை"

Leave a comment

Your email address will not be published.