இந்தியாவின் டி20 உலகக் கோப்பை ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்த் இடம்பெற வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100189

மும்பை:  டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வரும் அக்டோபர் 22ஆம் தேதி முதல் நடக்கவுள்ள சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்திய அணியின் பேட்டிங் வரிசை தற்போது தான் எந்தவித குழப்பமுமின்றி உள்ளது.

மேலும் இதனை உறுதிபடுத்தும் விதமாக ரோகித் ஷர்மா இதுகுறித்து கூறுகையில்,” கடைசி நேரத்தில் சொல்லி வீரர்கள் தயாராவதற்கு பதிலாக பாகிஸ்தான் போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ எப்போதோ உறுதி செய்து வீரர்களிடமும் தெரிவித்துவிட்டோம். அதுமட்டுமின்றி முன்கூட்டியே சொல்லிவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டிக்கு ஏற்ப தயாராவார்கள் என்பதால் கூறிவிட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் மாற்றம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா என முதல் ஐந்து இடங்கள் வலுவாக உள்ளது. அதேபோல சமீபத்திய டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக்கின் இடமும் உறுதியாக உள்ளது.

ஆனால் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். இடது-வலது காம்பினேஷனால் பவுலர்கள் மற்றும் ஃபீல்டிங்கை எதிரணியானது மாற்றிக்கொண்டே இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி அவர்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தால் எதிரணிக்கு அழுத்தம் ஏற்படும்.

டாப் 3 வீரர்களை மட்டுமே நம்பி நான் அணியை தேர்வு செய்ய மாட்டேன். ஏனெனில் 3 வீரர்களை மட்டும் அனுப்பினால் பணி முடிந்துவிடாது. எந்த இடத்தில் யார் இறங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மிக முக்கியம். அதேநேரத்தில் எதிரணியின் பலம் என்னவென்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். அதன் காரணமாகவே அணிக்கு ஒரு இடதுகை வீரர் தேவை.எனவே ரிஷப் பந்தை அணியில் எடுக்க வேண்டும்” என்று சச்சின் கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதுகுறித்து பேசுகையில்,“ஷமி மிகச்சிறந்த பந்துவீச்சாளர். பும்ராவுக்கு சரியான மாற்று வீரர் ஷமி தான். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வரும் ஷமி நல்ல ஸ்டிரைக் பவுலர். பெரிய மற்றும் முக்கியமான போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்ட ஷமியின் பந்துவீச்சை நான் என்ஜாய் செய்து பார்ப்பேன். பும்ராவின் இடத்தை நிரப்ப சரியான வீரர் ஷமி தான் என்றாலும், ஆடும் லெவன் குறித்து என்னால் எதுவும் கூறமுடியாது” என தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்தியாவின் டி20 உலகக் கோப்பை ஆடும் லெவன் அணியில் ரிஷப் பந்த் இடம்பெற வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*