இந்தாப்பா மைக்கேல் வான், உன்னோட ஒப்பாரிய நிறுத்து: நாதன் லயன் பதிலடி!

Nathan Lyon is all for Ahmedabad pitch as he hits out at the critics
Nathan Lyon is all for Ahmedabad pitch as he hits out at the critics

மைக்கேல் வான் கருத்திற்கு நாதன் லயன் பதிலடி கொடுத்துள்ளார். நடந்து வரும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்டில், இந்தியா 2 நாட்களுக்குள் இங்கிலாந்தை பத்து விக்கெட்டுகளால் வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது, ஆனால் சிவப்பு பந்து போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் முழு கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .

மைதானம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால் 30 விக்கெட்களில் 27 விக்கெட்களை அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாக் லீச் போன்ற நான்கு ஸ்பின்னர்கள் மட்டுமே வீழ்த்தினர். குறிப்பாக, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்பின்னர்கள் அக்‌ஷர், அஸ்வின் மட்டும் பந்துவீசி விக்கெட் மழை பொழிந்ததால் இங்கிலாந்து அணி 81 ரன்களுக்கு சுருண்டு, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணி முன்னாள் வீரர்கள் மைக்கேல் வான், அலெஸ்டர் குக், டேவிட் லாயிட் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் போன்றவர்கள் மோடி மைதானம் விளையாடத் தகுதியற்றது. அதனால்தான் போட்டி இரண்டு நாட்களில் நடந்து முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததற்கு மைதானம்தான் முழுக் காரணம் எனத் தெரிவித்தனர். இதற்கு இந்திய தரப்பு பதிலடி கொடுத்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் மைதானத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், “வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசி 47, 60 ரன்களில் ஒரு அணியை சுருட்டினால் பாராட்டுகிறார்கள். ஆனால், ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினால் மைதானத்தில் குறை இருக்கு எனக் கூறி கண்ணீர் வடிக்கிறார்கள். தனது பெயருக்கு 399 டெஸ்ட் விக்கெட்டுகளை வைத்திருக்கும் லியோன், அகமதாபாத் டெஸ்டில் வழங்கப்படும் ஆடுகளம் புத்திசாலித்தனமானது என்றும், அந்த கியூரேட்டரை சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு (எஸ்.சி.ஜி) அழைத்துச் செல்ல விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி டிரா அல்லது வெற்றிபெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இங்கிலாந்து அணி வென்றால் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. பிங்க்-பந்து டெஸ்டில் இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய நிலையில், இங்கிலாந்து விளையாடும் லெவன் போட்டியில் ஜாக் லீச்சை மட்டுமே உள்ளடக்கியது.

Be the first to comment on "இந்தாப்பா மைக்கேல் வான், உன்னோட ஒப்பாரிய நிறுத்து: நாதன் லயன் பதிலடி!"

Leave a comment