இது கொண்டாட்டத்துக்கான நேரமில்லை… வருத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

புதுடெல்லி: வேட்டு வெடித்து கொண்டாடிய மக்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் வசை பாடியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு (ஏப்ரல் 5) 9 மணி முதல் 9.09 மணி வரை, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் மின்விளக்குகளை அனைத்து, அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஒளிர செய்தனர்.


மக்கள் ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, குடியரசுத் தலைவர் தொடங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை, பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்கள் இல்லங்களில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தியில் தீபங்கள் ஏற்றினர். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கோடிக்கணக்கான பொதுமக்கள் இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் பங்கேற்றனர்.


விளையாட்டு நட்சத்திரங்களும்
மக்களைப்போலவே இந்திய விளையாட்டு நட்சத்திரங்களும் இந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் பங்கேற்றனர். இதற்கிடையில் இந்த நிகழ்வின் போது பொதுமக்கள் சிலர் வேட்டு வெடித்து கொண்டாடினர். இதை இந்திய கிரிக்கெட் வீரர்கள் வசை பாடியுள்ளனர்.

இது தொடர்பாக காம்பீர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“இந்தியா உள்ளேயே இரு! நாம் இன்னும் போராட்டத்தின் பாதியில் தான் உள்ளோம். வேட்டு வெடித்து கொண்டாட வேண்டிய நேரமில்லை இது” என குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment on "இது கொண்டாட்டத்துக்கான நேரமில்லை… வருத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*