இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மண்டியிட்டு ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’க்கு ஆதரவு

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவர், இரண்டு நடுவர்கள் மேலும், பெஞ்ச் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் என அனைவரும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு மண்டியிட்டு நின்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இரண்டு அணி வீரர்களும் ‘Black Lives Matter’ லோகா பொறித்த டி-சர்ட் உடன் விளையாடுகின்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது.

ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனில் கொரோனா அச்சம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஜூன் 17-ந்தேதி மீண்டும் தொடங்கியது. இப்போட்டியின்போது வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அனைவரும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படவில்லை.

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோரி பேர்ன்ஸ், 2. டொமினிக் சிப்லி, 3. ஜோ டென்லி, 4. கிராவ்லி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஒல்லி போப், 7. பட்லர், 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. மார்க் வுட், 10, ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. டொமினிக் பெஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஜான் கேம்ப்பெல், 2 கிரேக் பிராத்வைட், 4. ஷமர்த்  ப்ரூக்ஸ், 5. ஷாய் ஹோப், 6. ராஸ்டன் சேஸ், 7. பிளாக்வுட், 8. டவ்ரிச், 9. ஜேசன் ஹோல்டர், 10, அல்ஜாரி ஜோசப், 11. கேமர் ரோச், 11. கேப்ரியல்.

Be the first to comment on "இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மண்டியிட்டு ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’க்கு ஆதரவு"

Leave a comment

Your email address will not be published.


*