இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து விளையாடும் 2 -வது டெஸ்டில் டாம் லாதம் அசத்தல் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜீத் ராவல் 5 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அந்த அணி 39 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

அதன்பிறகு மற்றொரு தொடக்க வீரர் டாம் லாதம் – ராஸ் டெய்லர் ஜோடி சிறப்பாக விளையாடியது. டெய்லர் 53 ரன் எடுத்து அவுட் ஆனார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் சதம் அடித்தார். இது அவருக்கு 11-வது சதம் (47 டெஸ்ட்) ஆகும். நியூசிலாந்து அணி 54.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முதல்நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. டாம் லாதம் 101 ரன்னுடனும், நிகோல்ஸ் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளது.

மற்ற இரு நாடுகள் பங்கேற்று விளையாடும் மற்றொரு டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது. பிங்க்-பால் டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றும் அடுத்து டேவிட் வார்னர் உடன் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 150 ரன்னைக் கடந்தார். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 73 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 166 ரன்களுடனும், லாபஸ்சாக்னே 126 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த ஜோடியை பாகிஸ்தான் பந்து வீச்சால் அவுட்டாக்க முடியாமல் திணறியது சோகமாக அமைந்தது. இருவரும் பிரிஸ்பேன் டெஸ்டிலும் சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து விளையாடும் 2 -வது டெஸ்டில் டாம் லாதம் அசத்தல் சதம்"

Leave a comment