இங்கிலாந்து மற்றும் இந்தியா : பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட், இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

www.indcricketnews.com-indian-cricket-news-64

பிரிஸ்டல்,இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி போட்டியை டிராவில் முடித்தது.இதன் பின்,இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்பட்டது.இதில் முதல் போட்டி பிரிஸ்டலில் நேற்று ஆரம்பமானது.இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தார்கள்.  இதைக் குறித்து கூறிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், தாங்கள் முதலில், பந்துவீச விரும்பியதாகவும் இருப்பினும் இதை சவாலாக ஏற்ப்பதாகவும் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துவிட்டால்எளிதில் வெற்றி தங்கள் வசப்படும் எனவும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மந்தனா (10) மற்றும் ஷெபாலி (15) குறைந்த அளவிலான ரன்களில் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த பூனம் சற்று நிலைத்து ஆடி 4 பவுண்டரிகள் விளாசி 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.ஆனால், கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அடித்து ஆடினார்.அவர் 41.1வது ஓவரில் பவுண்டரி விளாசி அரை சதம் அடித்துள்ளார்.இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்துள்ளது இது 13வது முறையாகும்.  அவருக்கு முன் சார்லட் எட்வார்ட்ஸ் 22 அரை சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.எனினும், 45வது ஓவரில் எக்ளெஸ்டோன் வீசிய 3வது பந்தில் மிதாலி ராஜ் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் வீழ்ந்தார்கள்.அதன்பின் ஹர்மன்பிரீத் (1), தீப்தி (30), பூஜா (15) தன்யா (7) ரன்கள்எடுத்திருந்தார்கள்.இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.  ஷிகா (3) மற்றும் ஜூலன் (1) ரன்களுடன் ஆட்டமிழக்காமல்இருந்தார்கள்.இங்கிலாந்து அணி வெற்றி பெற 202 ரன்கள் இலக்காக இருந்தது.இதனையடுத்து,இங்கிலாந்து விளையாடியது, அந்த அணியின் லாரன் 16 ரன்களில் வெளியேறினார்.ஆனால், மற்றொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான டேமி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார். கேப்டன் நைட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.அவரை தொடர்ந்து வந்த ஸ்சிவெர் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.டேமி மற்றும் ஸ்சிவெர் ஆகிய இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இருவரும் ரன்களுக்கு இணையான பந்துகளை சந்தித்துள்ளனர்.இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.இதனால், இந்திய அணியை இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பாக விளையாடி வென்றது.

Be the first to comment on "இங்கிலாந்து மற்றும் இந்தியா : பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட், இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி"

Leave a comment