இங்கிலாந்து அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் இதோ!

ஜூலை 8ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை மேற்கிந்தியத் தீவுகள் அணி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. தற்போது, இங்கிலாந்து அணியும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொயின் அலி, பேரிஸ்டோ ஆகிய வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்குத் திரும்ப உள்ளனர்.

ஜூலை 8ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் ஏகாஸ் பௌல் நகரத்திற்கு ஜூன் 23ஆம் தேதி வருவார்கள். கொரோனா அச்சுறுத்தல் இல்லாத மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அங்கு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறும். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்து அணியில் மொயின் அலி இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்ற அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டார். ஒற்றை இலக்க ரன்களை எடுத்து, பந்து வீச்சிலும் சொதப்பினர். அதன்பின், அவரால் இங்கிலாந்து அணியின் இடம்பெற முடியவில்லை.

அணித் தேர்வு குறித்துப் பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகி மோ போபாட் ‘கால நிலைக்கு ஏற்றார் போல் வீரர்களை விரைந்து தேர்வு செய்துள்ளோம். பயிற்சியாளர்கள் முடிந்த வரை விரைவாக வீரர்களைத் தயார் செய்வார்கள் என்று நம்புகிறோர். வீரர்கள் தொடர் முடியும் வரை பிசியாக இருப்பார்’ என்று அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா மாற்று வீரர்கள் விதிமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் சொந்த காரணங்களால் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி : மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பெர்ஸ்டோவ், டொமினிக் பெஸ், ஜேம்ஸ் பிரேசி, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், சாகிப் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மத்தேயு பார்கின்சன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், டோம் சிபிலி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், அமர் விர்டி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

Be the first to comment on "இங்கிலாந்து அணியில் இடம்பெற்று இருக்கும் வீரர்கள் இதோ!"

Leave a comment

Your email address will not be published.