இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்

www.indcricketnews.com-indian-cricket-news-172

IND vs ENG Test Series: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் தங்கி வருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை இங்கிலாந்தில் ஆடிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கேயே இருந்து வருகிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் அதேவேளையில், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் மூவர் அடுத்தடுத்து காயத்தால் வெளியேறி சிகிச்சையில் உள்ளனர்.

இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து முதலில் விலகிக்கொண்டார். அவரைத்தொடர்ந்து ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை ஃபாஸ்ட் பவுலராக எடுக்கப்பட்டிருந்த ஆவேஷ் கான் ஆகிய இருவரும் காயத்தால் வெளியேறினர்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கும் இந்நிலையில், 3 வீரர்கள் காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் கஷ்டமாகவே அமைந்தது. எனவே காயத்தால் வெளியேறிய  வீரர்களுக்கு பதிலாக வேறு 2 வீரர்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு சென்று இந்திய அணியுடன் விளையாடவிருக்கின்றனர்.

வரும் 29ம் தேதி இலங்கைக்கு எதிரான தொடர் முடிகிறது மற்றும் ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. எனவே இலங்கை தொடரை முடித்துவிட்டு, பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரையும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் ஸ்டாண்ட் பை வீரராக சேர்க்கப்பட்டிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரன், இந்திய மெயின் அணியில் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக விலகிய வீரர்களை தவிர்த்துவிட்டு, மாற்று வீரர்களைக் கொண்ட, அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

1.ரோஹித் சர்மா, 2.மயன்க் அகர்வால், 3.புஜாரா, 4.விராட் கோலி(கேப்டன்), 5.அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), 6.ஹனுமா விஹாரி, 7.ரிஷப் 8.பண்ட்(விக்கெட் கீப்பர்), 9.ரவிச்சந்திரன் அஷ்வின், 10.ரவீந்திர ஜடேஜா, 11.அக்ஸர் படேல், 12.ஜஸ்ப்ரித் பும்ரா, 13. இஷாந்த் சர்மா, 14.முகமது ஷமி, 15. முகமது சிராஜ் 16.ஷர்துல் தாகூர் 17.உமேஷ் யாதவ், 18.கேஎல் ராகுல், 19.ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), 20. அபிமன்யூ ஈஸ்வரன், 21.பிரித்வி ஷா, 22.சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்; இந்திய அணியில் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்"

Leave a comment