ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 185 ரன்னும், டேவிட் வார்னர் 154 ரன்னும் எடுத்தனர்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 240 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர். 

ஜோ பேர்ன்ஸ் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய வார்னர் 154 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி சதமடித்த லாபஸ்சாக்னே 185 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் அரை சதமடித்து 60 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 340 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சிக்கி 94 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

அப்போது களமிறங்கிய பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர். 

பொறுப்புடன் ஆடி சதமடித்த பாபர் அசாம் 105 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஸ்வானும் 95 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், பாகிஸ்தான் அணி 84.2 ஓவரில் 335 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Be the first to comment on "ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி"

Leave a comment