ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா பாகிஸ்தானுடன் இன்று 2-வது டெஸ்ட்

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் இன்று தொடங்குகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் இன்று (29-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்டில் மார்கஸ், வார்னர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். பந்து வீச்சில் ஸ்டார்க், (7 விக்கெட்), ஹாசல்வுட் (6 விக்கெட்) கும்மின்ஸ் (5 விக்கெட்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலவீனமாகவே இருக்கிறது, பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா ஐ.சி.சி. உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் 176 புள்ளிகளை எட்டும். பாகிஸ்தான் அணி இதுவரை புள்ளிகள் எதுவும் பெறவில்லை. அந்த அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டுமே புள்ளிகளை பெறும். வெற்றி பெற்றால் 60 புள்ளியும் டிரா செய்தால் 20 புள்ளியும் கிடைக்கும்.

மற்ற இரு நாடுகள் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மவுன்ட் மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் முதலாவது டெஸ்டில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கின் இரட்டை சதமும், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெரின் அபார பந்து வீச்சும் (மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்) நியூசிலாந்துக்கு இமாலய வெற்றியை தேடித்தந்தன.

Be the first to comment on "ஆஸ்திரேலியா தொடரை வெல்லுமா பாகிஸ்தானுடன் இன்று 2-வது டெஸ்ட்"

Leave a comment