ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு, க்ளென் மாக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

இந்தியாவில் வரும் ஜனவரி 14ம் தேதி துவங்கி 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐசிசி தரவரிசையில் 5வது இடத்திற்கு தடாலென முன்னேறியுள்ள மார்னஸ் லாபுசாக்னே இந்த தொடரின்மூலம் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியை துவங்கவுள்ளார்.

முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஷான்மார்ஷ், நாதன் ஹோல்டர் நைல், ஸ்டோனிஸ், நாதன் லயன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பெஹரன் இடம் பெறவில்லை.

டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஸ்சேன் ஒருநாள் போட்டிக்கான அணியில் அறிமுகமாகி உள்ளார். அவரது டெஸ்ட் சராசரி 58.05 ஆகும்.

ஆல் ரவுண்டர் அபோட், ஆஸ்டன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா.

இதன்பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியுற்ற நிலையில், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் கால்டர்-நைல், க்ளென் மாக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் லியோன், காயம் காரணமாக பெஹ்ரன்டார்ப் ஆகியோர் இந்தியாவிற்கு எதிரான அணியில் இடம்பெறவில்லை.

டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியினரின் திறன் உள்ளூரில் மிக சிறப்பாக உள்ளதாகவும், அந்த திறனை இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர்கள் எதிரொலிக்க செய்வார்கள் என்றும் தேசிய தேர்வாளர் ட்ரெவர் ஹான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த போட்டிகள் ராஜ்காட்டில் 17ம் தேதியும் பெங்களூருவில் 19ம் தேதியும் நடைபெறவுள்ளன.



Be the first to comment on "ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு, க்ளென் மாக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் நீக்கம்"

Leave a comment

Your email address will not be published.


*