ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவன் அணியை இந்தியா கணித்துள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-10034389

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம், ஜூன் 7-11 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதிபெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருபப்தால், இந்திய அணி வீரர்கள் முழு மூச்சாக இறங்கி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா தனது தனிப்பட்ட காரணத்திற்காக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத்தொடர்ந்து முதுகுவலி காரணமாக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. இருப்பினும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் எந்த யுத்தியை பயன்படுத்தி மும்பையில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அதேசமயம் ரோஹித் இல்லாத நிலையில், ஷுப்மன் கில்லுடன் இணைந்து விக்கெட் கீப்பரும் பேட்டருமான இஷான் கிஷான் ஓபனிங் இறங்குவது தான் சுலபமான வழி. ஏனெனில் இதற்கு முன்னதாக காயம் காரணமாக விலகிய ரோஹித்துக்குப் பதிலாக வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இடம்பெற்ற இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விராட் கோலி வழக்கம்போல மூன்றாவது இடத்திலும், காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாத நிலையில் நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் என நட்சத்திர பேட்டர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் ரோஹித் ஷர்மா இல்லாததால் இஷான் கிஷனுக்கு ஓப்பனராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், மிடில் வரிசையில் கிஷனுக்கு மாற்றாக ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார். 

ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் பல மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்குவர். பந்துவீச்சை பொறுத்தவரை முகமது ஷமி, உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. 

Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் லெவன் அணியை இந்தியா கணித்துள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*