ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் 32 வயதான வேகப்பந்துவீச்சாளர் இந்தியாவுக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருப்பார்’: கவாஸ்கர் பாராட்டு

www.indcricketnews.com-indian-cricket-news-10565

கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாக்கிலுள்ள பாராபதி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணியிடம் சிறந்த செயல்திறன் கொண்ட ஒரேயொரு வீரர் இருந்தார்.

அவர் 32 வயதான புவனேஷ்வர் குமார். தனது சிறப்பான பந்துவீச்சால் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் புவனேஷ்வர் பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறை. அதற்குமுன்பு கடைசியாக 2012ல் பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசுகையில்,  “புவனேஷ்வர் குமாரைத் தவிர விக்கெட்டை வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் தற்போதைய அணியில் இல்லை என்பதுதான் முக்கியமான பிரச்னையாக உள்ளது. பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே,எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும். கடந்த இரண்டு போட்டிகளிலும், புவனேஷ்வரைத் தவிர வேறு யாராவது விக்கெட் எடுக்கிறார்களா? முதல் போட்டியில் 211 ரன்களை குவித்தும் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியாமல் போனதுக்கு இதுவே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய கவாஸ்கர்,”வெள்ளைப்பந்து காற்றிலோ அல்லது மேற்பரப்பிற்கு வெளியிலோ அவ்வளவாக ஸ்விங் ஆகாது. ஆனால் அந்த திறனை புவனேஷ்வர் பெற்றுள்ளார். ரிஷப் பண்ட்-ன் கேப்டன்ஷியை இதற்காகவே பாராட்டலாம். ஏனென்றால் பந்து பழசு ஆகிவிட்டால் ஸ்விங் ஆகாது என்பதை உணர்ந்து தொடக்கத்திலேயே 3 ஓவரை வீச வைத்துவிட்டார். அதன்பிறகு பந்துவீசி இருந்தால், புவனேஷ்வரால் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படத்தி இருக்கமுடியாது. எனவே இதேபோன்று பந்து பவுன்ஸாகும் ஆஸதிரேலியாவிலும், இவர் விளையாடினால் டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து  தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறுகையில்,”புத்திசாலித்தனமாக பந்துவீசிய புவனேஸ்வர் குமாரின் ஆட்டத்தை நான் முழுமையாக ரசித்தேன். ஏனெனில் ரீஸா ஹெண்டரிக்ஸ் இன்ஸ்ஹிங் பந்தை எதிர்கொள்வதில் திணறுவார் என முன்பே அறிந்துகொண்டு முதல் ஓவரிலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல தனது சிறந்த பந்துவீச்சினால் நக்கல்பந்தை வைத்து இரண்டாவது ஓவரில் டுவைன் ப்ரிட்டோரியஸ் விக்கெட்டையும், பவர்பிளேவின் கடைசி ஓவரில் வெண்டர் டூசனை ஒரேயொரு ரன் மட்டுமே எடுக்கச்செய்தும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் பவர்பிளே முடிவில் 3 ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய புவனேஷ்வர், தனது சிறந்த பப்துவீச்சின் மூலம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தீட்டிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் ” இவ்வாறு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் 32 வயதான வேகப்பந்துவீச்சாளர் இந்தியாவுக்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருப்பார்’: கவாஸ்கர் பாராட்டு"

Leave a comment

Your email address will not be published.


*