தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கேப்டவுனில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில், ஆலி போப்பின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிராலி 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இங்கிலாந்தின் பென் ஸ்டோஸ் 47 ரன்னும், ஜோ டென்லி 38 ரன்னும், ஜோ ரூட் 35 ரன்னும், சிப்லே 34 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆலி போப் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார்.
நேற்றைய முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்துள்ளது. மற்றும் ஆலிவர் போப் 56 ரன்களுடனும் (132 பந்து, 7 பவுண்டரி) ஆண்டர்சன் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆலிவர் போப் கடைசி நேரத்தில் கேட்ச் ஆனார். ஆனால் ரபடா நோ-பாலாக வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் 2-வது நாளிலும் பேட்டிங் செய்யும் அதிர்ஷ்டம் ஆலிபர் போப்புக்கு கிட்டியது.
தென்ஆப்பிரிக்கா சார்பில் பிளெண்டர், ரபாடா, நோர்ஜே, பிரிடோரியச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த
டெஸ்டில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரராக ரோரி பர்ன்ஸ் களம் இறங்க இருந்தார். ஆனால்
முந்தைய நாள் பயிற்சியின் போது கால்பந்து விளையாடியதில் காயமடைந்தார். மற்றும் இடது
கணுக்காலில் வலியால் துடித்த அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில்
தெரியவந்துள்ளது. இதையடுத்து தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ள அவர் தாயகம்
திரும்புகிறார்.
டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் ஜாலியாக
கால்பந்து ஆடும் போது காயத்தில் சிக்குவது அடிக்கடி நடந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து
கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் விதமாக கால்பந்து விளையாடுவதை இனி முற்றிலும் தவிர்க்க
அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Be the first to comment on "ஆலி போப்பின் அரை சதத்தால் கேப்டவுன் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 262 ரன்கள்"