ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.

அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டின் ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

ஆஷ்டோன் அகர், ஜோ பேர்ன்ஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பேட்டின்சன், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வடே, டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

Be the first to comment on "ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு"

Leave a comment

Your email address will not be published.