ஆப்கானிஸ்தானை 66 ரன்களை கெண்டு வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பை 2021 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-0018

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரங்கத்தில் 7-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் -12 சுற்றில் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் களம்கண்டன. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

எனவே பேட்டிங் செய்ய இந்திய அணி முதலில் களமிறங்க வலுவான தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா – கே எல் ராகுல் ஜோடியில் ரோகித் ஷர்மா 3 சிக்ஸர் 8 பவுண்டரி உட்பட  74(47) ரன்கள் கே.எல்.ராகுல் 69 (48) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டி20 கிரிக்கெட்டில் விரேந்தர் சேவாக்-கௌதம் கம்பீர்(136)  பார்ட்னர்ஷிப்புக்கு பிறகு அதிக ரன்கள் குவித்த பார்ட்னர்ஷிப் கே எல் ராகுல்- ரோகித் ஷர்மா(140) ஜோடிதான்.

அடுத்து ரிஷாப் பந்த் 27 (13) ரன்கள் ஹர்திக் பாண்டியா 35(13) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி  20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் குல்படின் நைப் 4 ஓவரில் மற்றும் ரிம் ஜனத் 1 ஓவரில் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

211 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கமாக இப்போட்டி அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ஷாஜாத் (0) -ஹஸ்ரதுல்லா ஜசாய் (13)ரன்கள் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து குல்பாடின் நைப் 11 ரன்கள், நஜிபுல்லா சத்ரான் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முகமது நபி 1 சிக்ஸர் 2 பவுண்டரி உட்பட 35(32)ரன்கள் ,கரீம் ஜனத் 30 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ரஷித் கான் டக் அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். இறுதி வரை சிக்ஸர் பவுண்டரி என விளாசி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் முகமது ஷமி  3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் ஜடேஜா  விக்கெட்டும் எடுத்தனர்.

மேலும் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால்  ரன்ரேட் +0.073 ஆக மாறியுள்ளது. மெகா ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நெட் ரன் ரேட்டை உயர்த்தியுள்ள நிலையில்  ஸ்காட்லாந்து மற்றும் நமீபியாவுக்கு எதிராக அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

இனிவரும் சுற்றில்  ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து மோதவுள்ளன. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்தியா வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை.

Be the first to comment on "ஆப்கானிஸ்தானை 66 ரன்களை கெண்டு வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பை 2021 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது."

Leave a comment

Your email address will not be published.


*