ஆண்கள் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார், ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் அசத்தல்

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

நிர்வாக கோளாறு, தோ்தல் முறைகேடு எதிரொலியாக இந்திய வில்வித்தை சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக வில்வித்தை கூட்டமைப்பு. இதனால் சா்வதேச போட்டிகளில் நடுநிலை அணியாக இந்திய வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனா்.

பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் ஆண்களுக்கான ரீ-கர்வ் பிரிவில் இந்திய வீரர் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார்.

ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்.

ஹாங்காக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை நடைபெற்று வருகிறது.
ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான தீபிகா குமாரி – அட்டானு தாஸ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் யிச்சை செங் – சயோஜுயுயான் வெய் ஜோடியை எதிர்கொண்டார். இதில் இந்திய ஜோடி 6-2 என வெற்றி பெற்றது.

இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ்  போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.

மற்றொரு ஜோடியான அபிஷேக் வர்மா – ஜோதி சுரேகா அரையிறுதியில் கொரியா ஜோடியை 159-154 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுநாள் நடக்கிறது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வா்மா-ஜோதி சுரேகா வென்னம் இறுதிச் சுற்றில் சீன தைபே அணியை புதன்கிழமை எதிர்கொள்கிறது.

மேலும் ஆடவா் அணிகள் ரெக்கா்வ் பிரிவில் அதானு தாஸ், ஜெயந்தா , தருண்தீப் ராய் அடங்கிய இந்திய அணி 6-2 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது.ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் சவுரப் சவுத்ரி வெள்ளி பதக்கம் வென்றார்

தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். வடகொரியாவின் கிம் சாங் குக் 246.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

ஈரான் வீரர் பொரௌகி ஜாவித் வெண்கலப்பதக்கம் வென்றார். அடுத்த வருடம் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஆண்கள் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார், ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் அசத்தல்"

Leave a comment

Your email address will not be published.


*