ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக விராட் கோலியும் ஜடேஜாவும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034877

ஆலூர்: ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவிருக்கும் 2023 ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று  விளையாடவிருக்கிறது. அத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியானது தற்போது பெங்களூரிலுள்ள ஆலூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 2ஆம் தேதி கண்டியில் தனது முதல் போட்டியை விளையாடவுள்ளது. ஆகையால் இப்பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள் என்பதால், இந்த பயிற்சி போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி பயிற்சி போட்டியிலும் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக விராட் கோலியும் ரவீந்திர ஜடேஜாவும் வலைகளில் ஒன்றாக பேட்டிங் செய்வதைக் காணக்கூடிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைராலாகி வருகிறது. இதில் இந்தியாவின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருக்கும் கோஹ்லி, பயிற்சி போட்டியில் தனக்கே உரிய வழக்கமான பாணியில் உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். நான்காவது இடத்திற்கு சரியான வீரரை கண்டறிய அணி போராடி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டனான கோஹ்லி அந்த இடத்திற்கு பொருந்துவார்.

நடப்பாண்டு நடைபெற்ற ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வடிவங்களிலும் விளையாடிய விராட் கோலி, மொத்தம் 17 போட்டிகளில், 19 இன்னிங்ஸ் விளையாடி 54.66 சராசரியுடன் நான்கு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் உட்பட 984 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக  பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 186(364) ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும்.

மேலும் நடப்பாண்டு நடந்துமுடிந்த ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கோஹ்லி 53.37 சராசரியில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 427 ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 166(110) ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

அதேபோல 2023 ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, நான்காவது அதிக ரன்களை எடுத்தவர் ஆவார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறத் தவறினாலும், கோஹ்லி 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 53.25 சராசரியுடன் 139.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டு சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட 639 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அணியின் ஆல்ரவுண்டராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள குல்தீப் யாதவுடன் இணைந்து அணியின் சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக விராட் கோலியும் ஜடேஜாவும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்."

Leave a comment

Your email address will not be published.


*