“அந்த நேரத்துல ரொம்ப பெருமையா இருந்துச்சு.. ‘தோனி’ கூட ஸ்பெஷலா ‘வாழ்த்து’ சொன்னாரு..” நெகிழ்ந்து போன ‘சஞ்சு சாம்சன்’!!

Got congratulatory messages from Mahi bhai after becoming RR captain Sanju Samson
Got congratulatory messages from Mahi bhai after becoming RR captain Sanju Samson

14 ஆவது ஐபிஎல் சீசன் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த முறை, இரண்டு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்த சீசனில் அறிவிக்கப்பட்டுள்ளார் இளம் வீரர் சஞ்சு சாம்சன். அணியை வழிநடத்த தயாராகி வருகிறார்.குறிப்பாக முதல் சீசனில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி அதன் பிறகு ஒரு முறை கூட சாம்பியனாகவில்லை. எனவே இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என உறுதியாக உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த சீசனில் தலைமையாற்றிய நிலையில், சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது, அவருக்கு காயமடைந்தது. இதிலிருந்து முழுமையாக குணமடைய இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என்பதால், அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, டெல்லி அணியின் கேப்டனாக மற்றொரு இளம் வீரர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். அதே போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், கடந்த சீசனில் தலைமை தாங்கினார். ஆனால், இந்தாண்டு ஏலத்திற்கு முன்பாக ஸ்மித்தை விடுவித்த ராஜஸ்தான் அணி, இந்திய இளம் வீரர் சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்தது.

தோனி, கோலி, ரோஹித் போன்ற அனுபவம் மிக்க கேப்டன்களுக்கு மத்தியில், சாம்சன் மற்றும் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அணியை தலைமை தாங்கவுள்ளது, அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தான் கேப்டன் ஆனது குறித்து, சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் சில கருத்துக்களை பேசியுள்ளார்.

‘ராஜஸ்தான் அணியில் திறமையான பல வீரர்கள் உள்ளனர். அதில், பல வீரர்களை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போன்றவர்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக நான் ஆடி வருகிறேன். ஒரு அணிக்காக இத்தனை நீண்ட ஆண்டுகள் ஆடி, இப்போது அந்த அணியின் கேப்டனாகவும் செயலாற்றவுள்ளது, பெருமையான தருணமாகும்.

நான் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதும், கோலி, ரோஹித் மற்றும் தோனி ஆகியோரிடம் இருந்து சிறப்பான சில வாழ்த்துச் செய்திகள் என்னைத் தேடி வந்தன’ என சஞ்சு சாம்சன் சற்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இளம் கேப்டனாக உருவெடுக்கும் சஞ்சு சாம்சனை சக சீனியர் கேப்டன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

Be the first to comment on "“அந்த நேரத்துல ரொம்ப பெருமையா இருந்துச்சு.. ‘தோனி’ கூட ஸ்பெஷலா ‘வாழ்த்து’ சொன்னாரு..” நெகிழ்ந்து போன ‘சஞ்சு சாம்சன்’!!"

Leave a comment

Your email address will not be published.


*