அதிரடி ஆட்டம் போட்ட மேக்ஸ்வெல்… ஹைதராபாத் போராட்டம் வீண்.. முதல் போட்டியிலேயே வென்ற பெங்களூர்!

Royal Challengers Bangalore beat Sunrisers Hyderabad by 6 runs
Royal Challengers Bangalore beat Sunrisers Hyderabad by 6 runs

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். 2020 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 163 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணிக்கு தேவ்தத் படிக்கல் – ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர். பின்ச் அதிரடி ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இளம் வீரர் தேவ்தத் படிக்கல் தன் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அதிரடி ஆட்டம் ஆடி திகைக்க வைத்தார். ஆரோன் பின்ச் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து நிதான ஆட்டம் ஆடினார். தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்திலேயே பின்ச் 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி 13 பந்துகளில் ஒவ்வொரு ரன்னாக ஓடி 14 ரன்கள் எடுத்து தன் முதல் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பெங்களூர் அணி ரன் குவிப்பை அதன் பின் ஏபி டிவில்லியர்ஸ் கவனித்துக் கொண்டார். அவர் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து மிரட்டினார். 20வது ஓவரில் அவர் ரன் அவுட் ஆனார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் அணி பந்துவீச்சில் திணறியது. புவனேஸ்வர் குமார் மட்டுமே 7 ரன்களுக்கு குறைவாக கொடுத்தார். ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். மிட்செல் மார்ஷ் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து வெளியேறினார். பெங்களூர் அணி 163 ரன்கள் எடுத்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பலம் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கி நம்பிக்கை அளித்தது அந்த அணி.

Be the first to comment on "அதிரடி ஆட்டம் போட்ட மேக்ஸ்வெல்… ஹைதராபாத் போராட்டம் வீண்.. முதல் போட்டியிலேயே வென்ற பெங்களூர்!"

Leave a comment

Your email address will not be published.