அடுத்தாண்டு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற இந்திய பெண்கள் அணி!

நியூசிலாந்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.

நியூசிலாந்தில் அடுத்தாண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மார்ச் 7

நடக்கவுள்ளது.

பாக் தொடர் ரத்து
இதற்கிடையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதயிருந்த பெண்கள் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆறாவது சுற்று போட்டி கடந்த ஜூலை மற்றும் நவம்பர் 2019 இல் நடக்கயிருந்தது. ஆனால் இரு நாட்டுக்கு இடையே இருந்த அரசியல் காரணத்தால் இந்த தொடர் நடக்காமல் போனது.



கொரோனா தொற்று
இதேபோல தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும், இலங்கை, நியூசிலாந்து அணிகளும் கடைசி சுற்று போட்டியில் பங்கேற்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து புள்ளிகளை இரு அணிகளும் பகிர்ந்து கொள்வதாக ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப் கமிட்டி அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலியா (37 புள்ளிகள்), இங்கிலாந்து (29), தென் ஆப்ரிக்கா (25), இந்தியா (23) அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறியுள்ளது. இப்பட்டியலில் பாகிஸ்தான் (19), நியூசிலாந்து (17), வெஸ்ட் இண்டீஸ் (13), இலங்கை (5) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் வரும் ஜூலை 3 – 19 வர இலங்கையில் நடக்கவுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த அட்டவணையில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள 3 இடங்களுக்கு பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை, வங்கதேசம், அயர்லாந்து என கடும் போட்டி நிலவுகிறது.

Be the first to comment on "அடுத்தாண்டு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற இந்திய பெண்கள் அணி!"

Leave a comment

Your email address will not be published.


*