அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 233/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகல்-இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஜோ பேர்ன்ஸ், மேத்யூ வடே ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், லாபஸ்சேன், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இடம்பிடித்தனர்.

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். பிரித்வி ஷா 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 18.1 ஓவரில் 32 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் நம்பிக்கையுடன் விளையாடியது. விரைவாக ரன்கள் அடிக்கமுடியவில்லை என்றாலும், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சோதிக்கும் வகையில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 160 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆவுட் ஆனார். அடுத்து வந்த ரகானேவும் நிதானமாக விளையாடினார்.

விராட் கோலி 123 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 188 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 74 ரன்கள் (180) எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த விஹாரி 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

187 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் அடுத்த 19 ரன்னுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. சகா மற்றும் அஸ்வின் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இதனால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா ஒரு முறையும் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கும் அஜிங்யா ரஹானே சிறப்பாக செயல்படுவார் என விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நான் இல்லாத சமயத்தில் அவர் அணியை திறம்பட வழிநடத்துவார். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அருமையாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

Be the first to comment on "அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 233/6"

Leave a comment

Your email address will not be published.